Sudharshini / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
அக்குறணை, அஸ்ஹர் தேசிய பாடசாலையின் பதில் அதிபராகஎம்.எஸ்.எம்.இக்பால் என்பவர் கடமையில் இருக்கும் போது, மற்றொருவர் பதில் அதிபராக நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாடசாலைக்கு முன்பாக இன்று (29) ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.
'தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமினால், புதிய பதில் அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார்' என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோர், குற்றஞ்சாட்டினர்.
'இப்பாடசாலையில் சுமார் 2,300 மாணவ, மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். ஏற்கெனவே கடமையாற்றும் பதில் அதிபர், பாடசாலையை திறமையாக வழி நடத்தி வருகின்ற நிலையில், புதிதாக ஒருவரை மீண்டும் நியமிப்பதன் மூலம் பாடசாலையின் கல்வி செயற்பாடுகள் பாதிப்படையும்' எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமை தொடர்புக்கொண்டு கேட்டபோது, 'அக்குறணை, அஸ்ஹர் பாடசாலை ஒரு தேசிய பாடசாலையாகும். எனவே, தகுதி வாய்ந்த ஒருவரை நியமித்தது கல்வி அமைச்சின் செயற்பாடாகும். அதனுடன் என்னை தொடர்புப்படுத்துவது அர்த்தமற்றது' என்றார்.
8 minute ago
43 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
43 minute ago
54 minute ago
1 hours ago