Sudharshini / 2016 மார்ச் 01 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
புதிய அரசாங்கத்தின் ஆட்சியே தற்போது நடைபெற்று வருவதாகவும் எனவே அரசாங்க அதிகாரிகள் அதனை, கவனத்திற்கொள்ள வேண்டும் எனவும் தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
'அரசாங்கம் வழங்கும் உதவிகளை, பெற்றுக்கொடுக்கும் போது அவை தகுதியானவர்களுக்கு சென்றடைய வேண்டும்' எனவும் அவர் வலியுறுத்தினார்.
கண்டி, பூஜாபிட்டிய பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை(29) மாலை இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார். இங்கு மேலும் உரையாற்றிய அவர்,
'புதிய அரசாங்கத்தின் ஆட்சியே தற்போது நடைபெற்று வருகின்றது. ஆனால், இன்னும் அரசாங்கம் மாற்றமடையவில்லை என்ற மனப்பாங்கில் சில அரசாங்க அதிகாரிகள் செயற்பட்டு வருகின்றனர்.
அரசாங்க அதிகாரிகள், வாழ்வின் எழுச்சி போன்ற திட்டங்களுக்காக பயனாளிகளை தெரிவுசெய்யும் போது நியாயமான முறையில் நடந்துக்கொள்ள வேண்டும். இத்திட்டங்களுக்கூடாக கடந்த காலங்களில் உதவிகளை பெற்றவர்களே தொடர்ந்து உதவிகள் பெற்று வருகின்றனர். ஆனால், உதவியை பெற வேண்டியவர்கள், அந்த உதவிகளுக்காக தொடர்ந்து காத்துகொண்டிருக்கின்றனர். எனவே, அவர்களுக்கும் உதவிகள் சென்றடையும் விதத்தில் அதிகாரிகள் நடந்துகொள்ள வேண்டும்' என அவர் மேலும் கூறினார்
9 minute ago
44 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
44 minute ago
55 minute ago
1 hours ago