Princiya Dixci / 2016 பெப்ரவரி 14 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 300 வருடங்களுக்கும் மேல் பழமை வாய்ந்த குளுகம்மன ரஜ மஹா விகாரையை உடைத்து அங்குள்ள 27அடி நீளமுள்ள பழமை வாய்ந்த புத்தர் சிலை உட்பட 05 சிலைகளை உடைத்து புதையல் தேடியுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை (14) அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் விகாராதிபதி வண. எகிரியே குனரதன தேரர், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.
நேற்று அதிகாலை 01 மணியளவில் நாய்கள் குறைக்கும் சத்தம் கேட்டமையால் வெளியில் வந்து டோச்சை அடித்துப் பார்த்ததாகவும் இதற்கு முன்னரும் பல தடவைகள் இவ்விகாரையை புதையல் எடுப்பதற்காக உடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், இவ்விகாரையில் எவ்வித பெறுமதிமிக்க புதையல்களும் இல்லை என்று தெரிவித்துள்ள அவர், சேதப்படுத்தப்பட்டுள்ள புத்தர் சிலைகளின் தலைப்பகுதிக்கு பாதுகாப்புக்காகவும் மரியாதைக்காகவும் வைக்கப்பட்டிருந்த கவசங்களை திருடர்கள் அபகரித்துச் சென்றுள்ளதாகவும், இவை சுமார் 200 வருடங்கள் பழமை வாய்ந்தவை என்றும் விகாராதிபதி தெரிவித்தார்.
மேலும், விகாரையின் காணிக்கைப் பெட்டியையும் திருடர்கள் உடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago