Sudharshini / 2016 மார்ச் 08 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
ரஞ்சித் ராஜபக்ஷ
ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கி மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற லொறி ஒன்று, ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில்; கித்துல்கல மடக்கித்த பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேற்படி லொறி, கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த வானில் மோதியதையடுத்து வான் பின்னால் வந்துக்கொண்டிருந்த மரக்கறி லொறியுடன் மோதியுள்ளது. இந்நிலையில் மரக்கறி லொறி அதற்குப் பின்னால் வந்த முச்சக்கரவண்டியின் மீது மோதியுள்ளது.
மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற லொறியும் மரக்கறி ஏற்றிச்சென்ற லொறியும் அருகில் இருந்த வீட்டின் மீது மோதி குடைசாய்ந்ததில் வீட்டுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
.jpg)
8 minute ago
43 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
43 minute ago
54 minute ago
1 hours ago