Sudharshini / 2015 செப்டெம்பர் 28 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
பெருந்தோட்ட மக்களையும் உடைமைகளையும் பாதுகாத்துகொள்ள, சிவில் பாதுகாப்பு குழுக்கள் தோட்டங்கள் தோறும் அமைக்கப்பட வேண்டும் எனவும் இதற்கு இளைஞர்கள் முன்வர வேண்டும் எனவும் மலையக மக்கள் முன்னணியின் உப-தலைவர் ரூபன் பெருமாள் தெரிவித்தார்.
இரத்தினபுரி, லெல்லோபிடிய தோட்டத்தின் போபெத்த பிரிவிலுள்ள இந்து ஆலயத்தின் வருடாந்த தேர்திருவிழாவுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த இளைஞர்களை பெரும்பான்மையின இளைஞர்கள் தாக்கிய விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.
இச்சம்பவம், கடந்த செவ்வாய்க்கிழமை (22) இரவு இடம்பெற்றதுடன் இதில் இரு இளைஞர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அவ் அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
'பெருந்தோட்ட மக்கள் தனது அடிப்படை உரிமைகளை முழுமையாக அனுபவிக்க முடியாமல் பல்வேறு அசம்பாவிதங்களுக்கு முகங்கொடுத்து வருவதானது வருத்தமளிக்கின்றது. இவ்வாறான நியாயமற்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருக்க அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
இதேவேளை, பெரும்பான்மையினருக்கு மத்தியில் வாழும் இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்த பெருந்தோட்ட இளைஞர்கள், இவ்வாறான அவசர நிலைமைகளில் நாம் முறையான பாதுகாப்பை உறுதிசெய்யும் வரை தமது தோட்ட மக்களையும் உடைமைகளையும் பாதுகாத்துகொள்வதற்காக முன்வர வேண்டும்.
அத்துடன், தோட்டங்கள் தோறும் சிவில் பாதுகாப்பு குழுக்களை அமைப்பதற்கும் முன்வரவேண்டும்' என மேலும் கூறினார்.
41 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
45 minute ago
2 hours ago