Kogilavani / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.செல்வராஜா
'அரசாங்கத்தின் இறுதி அதிகார, பொறுப்புமிக்கதோர் கட்டமைப்பாக, கிராமங்கள், தோட்டங்கள்தோறும், „பிரஜைகள் சபை... உருவாக்கப்பட வேண்டுமென ஊவா வலம்புரி மலையக அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
'இன,மத,மொழி,பிரதேச அடிப்படையற்ற வகையில் „இலங்கையர்... என்ற ரீதியில் அரசியல் யாப்பு தயாரிக்கப்படல் வேண்டும். அனைத்து மக்களும் சமமாக மதிக்கப்படும் தன்மை உறுதிப்படுத்தப்படல் வேண்டும்' என்றும் அவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.
புதிய அரசியல் அமைப்பு திருத்தத்துக்கான கருத்துக்களையும் பரிந்துரைகளையும் பெற்றுக்கொள்ளும் நிபுணத்துவ குழுவின் அமர்வு, பதுளை மாவட்ட அரசாங்க செயலக கேட்போர் கூடத்தில் புதன்கிழமை(24) நடைபெற்றது. இவ்வமர்வில் கலந்துகொண்டபோதே ஊவா வலம்புரி மலையக அமைப்பு தமது பரிந்துரைகளை முன்வைத்தது.
அமைப்பின் தலைவரான ஆர்.ரகுராஜ், செயலாளர் கே.பத்மநாதன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் சமர்ப்பித்த பரிந்துரைகளில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
நொடு முழுவதும் அரச கரும மொழியாகவும் நிர்வாக மொழியாகவும் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகள் காணப்படுவதுடன் இணைப்பு மொழியாக ஆங்கிலம் அமையலாம்.
இலங்கையின் கல்வித்திட்டம், தேசிய கொள்கைத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, மலையகப் பாடசாலைகளும் அத்திட்டத்தில் உள்ளடக்கப்படல் வேண்டும். மொழி ரீதியிலான பாடசாலைகள் கலையப்பட்டு,„கலப்பு பாடசாலைகள்... உருவாக்கப்படுதல் அவசியம்.
மொகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதுடன், பெருந்தோட்டங்கள்
உள்ளூராட்சிமன்றங்களுக்குக் கீழ் கொண்டுவரப்படுவதும் முக்கியமாகும்.
மெலையக மக்களுக்கான பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வு காணக்கூடிய வகையில், „தனியான ஆணைக்குழு... நிறுவப்பட வேண்டும்.
சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவங்கள் அமையும் வகையில், தேர்தல் தொகுதிகள் நிர்ணயம் செய்ய வேண்டியது அவசியம்.
மெலையக மக்களுக்கென அதிகாரபூர்வமிக்கதோர் அமைச்சு உறுதிப்படுத்தப்படுவது முக்கியமாகும். அத்துடன் விகிதாசார முறையின்;படி அமைச்சுக்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டியது அவசியமாகும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஊவா அபிவிருத்தி நிலைய இயக்குநர் வ.அந்தனீஸ், „இமைகள்... சமூக அபிவிருத்தி நிலையத் தலைவர் வே.முருகையா, „லக்சுமி... கிராம அபிவிருத்தி மன்றம் சார்பில் எம்.சத்தியவாணி, „எலதலுவ... கிராம அபிவிருத்தி சங்கம் சார்பில் எஸ்.ஆனந்தராஜா, „சன்றைஸ்... சமூக அபிவிருத்தி நிலையத் தலைவர் பி.ரகுபதி ஆகியோர் கையொப்பமிட்டு சமர்ப்பித்த பரிந்துரைகளில்,
அரச தொழில்வாய்ப்புக்கள், தொழில்நுட்பக்கல்வி, கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய விடயதானங்களில் மலையகத் தமிழருக்கு „கோட்டா... முறையை, நடைமுறைப்படுத்த வேண்டும்.
இலங்கை அரசாங்கம்„ மத சார்பற்ற அரசு... என்று யாப்பில் குறிப்பிடப்படல் வேண்டும்.
மெலையகத் தமிழருக்கு தேசிய பட்டியலில் இடம் ஒதுக்கப்படுவது கட்டாயப்படுத்தப்படுவதுடன், பெண்களுக்கும் உரிய இடம் வழங்கப்படல் வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago