Sudharshini / 2016 மார்ச் 29 , மு.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
ஊவா மாகாணத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றைச் சேர்ந்த மாணவர்கள், போலியான குறுந்தகவலை நம்பி, பாடசாலையை பகிஷ்கரித்த சம்பவமொன்று திங்கட்கிழமை (28) இடம்பெற்றுள்ளது.
பாடசாலைக்கு ஆசிரியர்கள் 60பேரும் சமூகமளித்திருந்த போதிலும் மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்க தவறியுள்ளனர். ஊவா மாகாண முதலமைச்சருக்கெதிராக இப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டதாக தெரியவருகிறது.
மேற்படி வித்தியாலயத்துக்கான கேட்போர்கூட கட்டட நிர்மாணிப்புக்காக, மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சசிந்திர ராஜபக்ஷ நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அந்நிதியின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தை, ஊவா மாகாணத்தின் புதிய முதல்வர்; சாமர சம்பத் தசநாயக்க திங்கட்கிழமை (28) திறந்து வைப்பாரென அலைபேசிகளுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
பாடசாலையில் நிலவும் தளபாடப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்துத்தரும்பபடி முதலமைச்சரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தபோதிலும், அதற்கான எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் இதற்கு தீர்வு தராமல் புதிய கட்டடத்தை திறப்பதில் எவ்வித பயனும் இல்லை என கூறியும் மாணவர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமது கோரிக்கைகளை நிவர்த்திசெய்துவிட்டு, புதிய கட்டடத்தை திறக்குமாறு பாடசாலை அபிவிருத்திச் சங்கமும்; கோரியுள்ளது.
இவ்விடயம் குறித்து, மாகாண கல்விப் பணிப்பாளர் பியதாச ரட்ணாயக்கவிடம் வினவியபோது, 'மேற்படி வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட கேட்போர் கூடத்தை திங்கட்கிழமை (28) திறப்பதற்கான எத்தகைய ஏற்பாடுகளும் செய்திருக்கவில்லை. போலியான குறுந்தகவல் அனுப்பப்பட்டதனால், மாணவர்கள் பாடசாலையை பகிஷ்கரித்துள்ளனர். குறுந்தகவல்களை அனுப்பியவர்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன'என்றார்.
இப்பாடசாலையில் தரம் 6 இலிருந்து 12 வரை வகுப்புக்கள் உள்ளன. 1,205 மாணவர்; கல்வி பயின்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .