Kogilavani / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கு.புஷ்பராஜா
அக்கரப்பத்தனை பிரதேச மக்களின் நலன்கருதி, பசுமலை வல்லவன் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை(28) நடமாடும் சேவையை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இப்பகுதியில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்கள் இன்றி பலர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது நலன் கருதி இந்நடமாடும் சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்தசிறி தெரிவித்தார்.
இதேவேளை, மக்களின் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் சகல திணைக்கள அதிகாரிகளும் இதில் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் கூறினார்.
மேலும் நடமாடும் சேவையின்போது பார்வை குறைபாடுடையவர்களுக்கு கண் பரிசோதனை நடத்தப்பட்டு மூக்கு கண்ணாடியும் வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago