Sudharshini / 2015 செப்டெம்பர் 08 , பி.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
குப்பைகளைக் கொண்டு பசளை தயாரிக்கும் வேலைத்திட்டம், பசறையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக பசறை பிரதேச செயலாளர் அஜந்தா தீபிகா, நேற்று(8) தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டத்துக்கென 6 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குப்பைகளைக் கொண்டு கொம்பஸ்ட் பசளை தயாரிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், சிறந்த முகாமைத்துவத்தை ஏற்படுத்த நடவடிக்கைகள் முன்னெடு க்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இதுகுறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
'பசறைப் பகுதியிலிருந்து நாளாந்தம் பெருமளவிலான குப்பைகள் மீதும்பிட்டிய என்ற இடத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அதனை, சிறந்த முகாமைத்துவத்தின் கீழ் முன்னிலைப்படுத்தி, பசளை தயாரிக்கும் இத்திட்டம், விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தற்போது ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியைக் கொண்டு மட்டும் இவ்வேலைத்திட்டத்தை பூரணப்படுத்த முடியாது. மேலும், உதவிகள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும்' என அவர் குறிப்பிட்டார்.
40 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago