Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 ஜனவரி 04 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரவு உணவை உட்கொண்டதன் பின்னர், உறங்குவதற்காக படுக்கைக்குச் சென்ற 22 வயதான ஜெயக்குமார் ஹரி பிரியன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
மவுசாகல தோட்ட சீட்டன் பிரிவில் நேற்றிரவு (03) படுக்கைக்குச் சென்ற இளைஞன், நிலையில் இன்று (04) காலை இருந்ததைக் கண்ட வீட்டார் அது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர, தலைமையிலான பொலிஸார் சம்பந்தப்பட்ட குடியிருப்புக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
ஜெயக்குமார் ஹரி பிரியன் (வயது 22) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு உணவை உட்கொண்டதன் பின்னர், உறங்குவதற்காக படுக்கைக்குச் சென்றுள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த ஹட்டன் நீதிமன்ற நீதிவான், சடலத்தை பார்வையிட்டார். ஹட்டன் கைரேகை நிபுணர்களும் கைரேகைகளை எடுத்துச் சென்றுள்ளனர். அதன் பின்னர், டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. செ.தி.பெருமாள்
6 minute ago
21 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
21 minute ago
27 minute ago