Kogilavani / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா
'இலங்கையில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் தாயக பூமியாக மலையகம் விளங்குகின்றது. எனவே, இந்திய வம்சாவளி தமிழர் மற்றும் மலையகம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கி, „இந்திய வம்சாவளி மலையக தமிழர்... என்ற பதம், புதிய அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டியது அவசியமாகும்' என ஊவா„ 'யுனி மீடியா'... அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, 'மலையகம் சார் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள், நாட்டில் எங்கெல்லாம் வாழ்கின்றார்களோ, அவர்களின் பிறப்புச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களிலும், மேற்படி பதம், குறிப்பிடப்படல்; வேண்டும். அவர்கள் தேசிய இனமாக அங்கிகரிக்கப்பட வேண்டும்' எனவும் அவர்கள் கோரினர்.
புதிய அரசியல் அமைப்பு திருத்தத்;துக்கான கருத்துக்களையும் பரிந்துரைகளையும் பெற்றுக்கொள்ளும் நிபுணத்துவ குழுவின் அமர்வு, பதுளை மாவட்ட அரசாங்க செயலக கேட்போர் கூடத்தில் புதன்கிழமை(24) நடைபெற்றது. இக்கூட்டத்தில் யுனி மீடியா இணையத்தின் பரிந்துரைகளை, இணையத் தலைவர் கே.வேலாயுதம், செயலாளர் முருகேசுப்பிள்ளை செல்வராஜா, ஆலோசகர் இரா.சாலோபராஜா ஆகியோர் சமர்பிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினர்.
இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்கள்,
'மலையகத் தமிழர் செறிந்து வாழும் பிரதேசங்களில் பிரதேச செயலாளர் பிரிவுகள், பிரதேச சபைகள் அதிகரிக்கப்படல் வேண்டும். இம்மக்களின் வாழ்வுரிமை உறுதிப்படுத்தப்படுவதுடன், கல்வி, பொருளாதாரம், தொழில் கட்டமைப்பு, தொழில் வாய்ப்புகள் என்பவற்றில் முன்னுரிமை வழங்கப்படுதல் அவசியமாகும்.
இலங்கையின் இறைமை, புதிய அரசியலமைப்பினாலும் நீதித்துறையினாலும் உத்தரவாதப்படுத்தப்படல் வேண்டும். அத்துடன், ஒரு சமயத்தையோ, மொழியையோ பிரதானப்படுத்தாமல் அனைத்து சமயங்களும் மொழிகளும் சமமாக மதிக்கப்படும் தன்மை பதியப்படல் வேண்டும்.
தெமிழ்மொழி அமுலாக்கல், மொழி உரிமை உத்தரவாதம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
பெருந்தோட்டங்கள் அனைத்தும், பிரதேச சபையின் நிர்வாகத்துக்கு உட்படல் முக்கியமாகும்.
மெனித உரிமை மீறல் வழக்குகளைத் தொடர பெருந்தோட்ட மக்களுக்கும் வாய்ப்புக்கள் வழங்கப்படுதல் வேண்டும்.
கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் போன்று இந்துக்களின் திருமணங்கள் ஆலயங்களில் நடைபெறும்போது, அவர்களுக்கு அங்கேயே, பதிவு திருமணம் செய்யும் முறைமை ஏற்படுத்தப்படல் வேண்டும்.
மெலையகத்துக்கான தனியானதொரு பல்கலைக்கழகமும் பதுளையில் தமிழ் ஆசிரியர் பயிற்சி கலாசாலையும் அமைக்கப்படுவதுடன் அனைத்து மாணவர்களும் அனைத்து மதங்களைப் பற்றி அறியக்கூடிய பாட விதானங்கள் உள்ளடக்கப்படல் வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago