2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

பதுக்கிய சிலிண்டர்களை தேடி ஹட்டனில் சோதனை

R.Maheshwary   / 2022 மார்ச் 28 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

ஹட்டனில் சில சமையல் எரிவாயு விநியோக முகவர்களால் மறைத்து வைக்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்களை தேடி, நுகர்வார் அதிகார சபையினரும் ஹட்டன் பொலிஸாரும் இன்று (28) தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்கள், நுகர்வோருக்கு விநியோகிக்கப்படாமல் மறைத்து வைக்கப்படுவதாக, நுகர்வோர் அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

லிட்ரோ நிறுவனத்தால் அதிகாலை வேளைகளில் முகவர் நிலையங்களுக்கு அனுப்ப்ப்படும் சிலிண்டர்கள், சில முகவர் நிலைய உரிமையாளர்களால் வேறொர இடத்தில் இறக்கப்பட்டு மறைத்து வைத்து, அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நுகர்வோர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, ஹட்டன் நகரில் மறைத்து வைக்கப்பட்ட, சமையல் எரிவாயு சிலிண்டர்களைத் தேடும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது என, நுவரெலியா நுகர்வோர் சேவை அதிகாரி அலுவலகத்தின் பொறுப்பதிகாரி ரங்க கருணாரத்ன தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X