Editorial / 2019 டிசெம்பர் 23 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.புவியரசன்
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக, பதுளை மாவட்டத்தில் 186 குடும்பங்களைச் சேர்ந்த 740 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 146 குடும்பங்களைச் சேர்ந்த 573 பேர், பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என, பதுளை மாவட்ட மேலதிகச் செயலாளர் ரஞ்சித் தெரிவித்தார்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர்,
பண்டாரவளை, ஹப்புத்தளை, பசறை, ஊவாபரணகம, ஹல்துமுல்ல, ஹாலிஎல, மஹியாங்கண, எல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள 146 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே, முகம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பசறை, லுணுகலை, மடூல்சீமை, பண்டாரவளை, எல்ல, நமுனுகுல ஆகிய பிரதான வீதிகளில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, அப்பகுதிகளுக்கான போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .