2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

பதுளையில் பொதுக்கூட்டம்

Yuganthini   / 2017 ஜூலை 31 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். செல்வராஜா        

பதுளை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் பொதுக்கூட்டம், நேற்று  (30)  பதுளை கெப்பிட்டல் சிட்டி  விடுதியில் சங்கத்தின் தலைவர் உபயரட்ன வனசிங்க தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, மறைந்த ஊடகவியலாளர் இரா. வல்லரசனின் ஆத்ம சாந்திக்காக கூட்ட ஆரம்பத்தின் போது, இருநிமிட நேரம் மௌன அஞ்சலி நிகழ்த்தப்பட்டது.

​இதைத்தொடர்ந்து, புதிய நிர்வாக சபை தெரிவு இடம்பெற்றது.

மேலும், தமிழ், சிங்கள மொழியிலான சஞ்சிகை ஒன்றை வெளியிடவும், சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அதிர்ஸ்ட இலாபச் சீட்டின் மூலம் பெறப்படும் நிதியில், சமூக மேம்பாட்டு வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .