2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

பள்ளிவாசலுக்கு அருகில் இறைச்சி கழிவுகள்

Niroshini   / 2016 ஜூலை 02 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

அக்குறணை  மல்கம்மந்தெனிய பிரதேசத்தில் அமைந்துள்ள ஜூம்மா பள்ளிவாசலுக்கு அருகில் அழுகிய நிலையிலுள்ள இறைச்சிகளை  இனம் தெரியாத  குழு ஒன்று, நேற்று அதிகாலை வீசிச் சென்றுள்ளதாக அளவத்துகொடைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிவாசலுக்கு அருகில் சத்தமொன்று கேட்டு அயலில் உள்ள ஒருவர் வந்து பார்த்தபோது கும்பலொன்று இறைச்சி கழிவுகளை வீசிவிட்டு, முச்சக்கர வண்டியொன்றில் தப்பிச் சென்றுள்ளது.

தப்பிச் சென்றர் ஒருவரது கையில் வாள் ஒன்று இருந்ததாகவும் வெளியே வந்தவரை அவர் வாளைக்காட்டி மிரட்டிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அனேகாகமாக பன்றி இறைச்சியின் பாகங்களாக இருக்கலாம் என்றும் இது ஒரு சமூக விரோதச் செயல் என்றும் அமைதியாக இருந்து தமது மார்க்கக் கடமைகளை நிறைவேற்றிவரும் முஸ்லிம்களை வீணாக வம்புக்கு இழுக்கும் ஒரு செயலாக தாம் கருதுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .