Princiya Dixci / 2016 பெப்ரவரி 22 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ
கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவப் பிரதேச சபைக்கு அருகில் உள்ள பண்டாரநாயக்கபுர பகுதியில், 20 அடி உயரமான பள்ளத்திலிருந்து குடும்பஸ்தர் ஒருவருடைய சடலத்தை இன்று திங்கட்கிழமை (22) மீட்டதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.
கினிகத்தேன - பண்டாரநாயக்கபுர பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான உதய சிறிவர்தன (வயது 45) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
20 அடி உயரமான பள்ளத்தில் சடலமொன்று கிடப்பதைக் கண்ட பிரதேச மக்கள், இது தொடர்பாக கினிகத்தேன பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைகளுக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நபர் உயிரிழந்தமை தொடர்பான விசாரணைகளை கினிகத்தேன பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago