Kogilavani / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சிவாணிஸ்ரீ
இரத்தினபுரி, புலுங்குபிடிய பொதுச் சந்தையின் அருகில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில், பழுதடைந்த தேங்காய்கள் 40, 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் கவலை தெரிவிக்கின்றனர்.
தோட்டத் தொழிலாளி ஒருவர், மேற்படி வியாபார நிலையத்தில் 20 தேங்காய்களை 40, 50 ரூபாய் பணம் செலுத்தி வாங்கியுள்ளதுடன் அவற்றை வீட்டுக்கு கொண்டு சென்று உடைத்து பார்த்த போது, அனைத்து தேங்காய்களும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டுள்ளன. பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள தாம், இவ்வாறு 40,50 ரூபாய் பணத்தை செலுத்தி தேங்காய்களை வாங்கி பின்பு, கவலையடைய வேண்டியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, பழுதடைந்த தேங்காய்களை விற்பனை செய்யும் வியாபார நிலையங்களை இனங்கண்டு, அவ் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
9 minute ago
44 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
44 minute ago
55 minute ago
1 hours ago