Sudharshini / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திக அருண குமார
நாவுல பிரதான வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பஸ் நிலையத்துக்கு வரும் காதல் ஜோடிகள், மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் வகையில் அநாகரிகமாக நடந்துகொள்வதாக பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இந்த பஸ்தரிப்பிடத்தை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் பாடசாலை மாணவர்களும் சிறுவர், சிறுமியரும்; உள்ளடங்குகின்றனர்.
பஸ் பயணத்துக்காக வரும் காதல் ஜோடிகள், பயணிகள் முகம் சுழிக்கும் வகையில் அநாகரிகமாக நடந்துகொள்வதால், சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை, அனைவரும் தர்மசங்கடத்துக்குள் உள்ளாவதாக தெரிவிக்கின்றனர்.
இதனால், பஸ்தரிப்பிடத்துக்கு சிறுவர்களை அழைத்துவர முடியாதுள்ளதாக அவர்கள் குறை கூறுகின்றனர்.
எனவே, இவ்வாறானவர்களுக்கு எதிராக அதிகாரிகள், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
3 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago