Sudharshini / 2015 செப்டெம்பர் 03 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஷ்
7 கோடியே 65 இலட்சம் ரூபாய் செலவில் தலவாக்கலை நகரில் அமைக்கப்பட்டுள்ள பஸ் நிலையம், குளவிகளின் இருப்பிடமாக மாறி வருவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கடந்த வருடம் அமைக்கப்பட்ட இந்த பஸ் நிலையம் இதுவரை திறந்து வைக்கப்படாமல் உள்ளது.
பஸ் நிலையத்தை அண்மித்து கடைத்தொகுதிகள், வங்கி, விகாரை என பொது இடங்கள் பல காணப்படுவதால், மக்களின் நடமாட்டம் இங்கு அதிகமாக உள்ளது.
இப்பகுதியில் குளவிகள் கலையுமானால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாவர் என கவலை தெரிவிக்கின்றனர்.
தலவாக்கலை நகரசபை, இக்குளவி கூடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago