Kogilavani / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ, மு.இராமச்சந்திரன்
கொழும்பிலிருந்து டயகம நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் முன் சில்லில் சிக்கி, 14 வயது சிறுவன் ஒருவர் நேற்று(17) மாலை உயிரிழந்துள்ளார்.
இச்சம்பத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியை ஹட்டன் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
அக்கரப்பத்தனை, வெவர்லி தோட்டத்தைச் சேர்ந்த சிவலிங்கம் சுகேந்திரன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து டயகம நோக்கி செல்லும் மேற்படி பஸ்ஸானது, ஹட்டன் பஸ் தரிப்பிடத்துக்கு சென்றுவிட்டே டயகம நோக்கி பயணிக்கும். இப்பஸ்ஸானது நேற்றும் குறித்த நேர அட்டவணைக்கு ஏற்பட்ட பஸ் தரிப்பிடத்தை அடைந்துள்ளது.
இந்நிலையில், பஸ்ஸில் பயணித்த மேற்படி இளைஞன், பஸ்ஸை நிறுத்துவதற்கு முன்னரே இறங்க முற்பட்டபோது, பஸ்ஸின் சில்லில் சிக்குண்டுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
சடலம் கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தினர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago