Gavitha / 2016 ஜூலை 23 , மு.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
'எனக்கு எவ்வகையில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும், என்னைச் சந்திக்க வரும் பொதுமக்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கக் கூடாதென்பதற்காகவே பஸ்ஸொன்றில் ஏறி ஊவா மாகாண சபைக்கு வந்துவிட்டேன்' என்று ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, நேற்று வெள்ளிக்கிழமை (22) தெரிவித்தார்.
கடந்த 20ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் கூட்டமொன்றில் கலந்துகொண்டு ஊவா மாகாண முதலமைச்சர் பதுளைக்கு திரும்புகையில், இரத்தினபுரி பகுதியில் வைத்து அவர் பயணித்த வாகனம் எதிரே வந்த வாகனத்துடன் மோதி விபத்துக்கானது.
இது தொடர்பாக மாகாண முதலமைச்சர் இரத்தினபுரி பொலிஸ் நிலையம் சென்று, வாக்குமூலங்களை அளித்துவிட்டு, அவ்வழியாக வந்து கொண்டிருந்த பஸ்ஸில் ஏறி வந்தே பதுளையில் நடைபெற்றுக்கொண்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டார். இதன்போது அவரிடம் இது தொடர்பாக வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
3 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago