Niroshini / 2021 மே 02 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மகேஸ் கீர்த்திரத்ன
தற்போதைய கொரோனா பரவல் சூழ்நிலையில், பஸ்களில் வியாபார நடவடிக்கைகளிலோ, யாசகம் பெறும் நடவடிக்கைளிலோ ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த மத்திய மாகாண போக்குவரத்து சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஹசித விஜேதிலக, இவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு, ஆதரவு வழங்கும் பஸ்களின் உரிமம் இரத்து செய்யப்படுமென்றும் எச்சரித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், மத்திய மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலின் பேரில், பொது போக்குவரத்து மூலம் கொவிட் தொற்றுநோய் பரவுவதைக் குறைக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய மாகாண போக்குவரத்து சேவைகள் ஆணைக்குழு முன்னெடுத்து வருவதாகவும் கூறினார்.
இதன் ஒரு கட்டமாக, பஸ்களில் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கெதிரான நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், ஹசித விஜேதிலக தெரிவித்தார்.
15 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
2 hours ago