Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 14 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமச்சந்திரன், பி.கேதீஸ், எஸ்.கணேசன், கு.புஸ்பராஜ்
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில், பாதையை கடக்க முற்பட்டவரை மோதி தப்பிச்சென்ற வான் சாரதி, லிந்துலை பகுதியில் இன்று (14) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக, தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்
இவ்விபத்து, ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை தமிழ் வித்தியாலயத்துக்கு அருகில் நேற்று (13) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றது.
இதில், லிந்துலை கூம்ஸ் தோட்டத்தைச் சேர்ந்த சூசை பிலிப் சந்தனம் (வயது 56) என்பவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தலவாக்கலை நகரில் இருந்து அதிவேகமாக வந்த வான் ஒன்றை, வீதியில் கடமையில் இருந்த தலவாக்கலை பொலிஸார் இருவர் நிறுத்த முற்பட்ட வேளையில், சாரதி வானை நிறுத்தாமல் சென்றுள்ளார்.
இதன்போது போகும் வழியில், குறித்த வான் சாரதி, வீதியைக் கடக்க முற்பட்ட குறித்த நபரை மோதி விட்டு தப்பிச் சென்றுள்ளார். இதில் படுகாயங்களுக்குள்ளான நபர், ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், லிந்துலை பிரதேசத்தில் வானை மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை குறித்த வானை மீட்ட பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய சாரதியையும் கைதுசெய்தனர்.
மேலும், சடலம் லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும், கைதுசெய்யப்பட்ட வான் சாரதியை நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago