Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 டிசெம்பர் 08 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பசறை,லுணுகலை பகுதிகளில் பலத்த காற்று காரணமாக பொதுமக்கள் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உடனடி மாற்று நடவடிக்கைகள் குறித்து செந்தில் தொண்டமான் மாவட்ட அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பசறை, லுணுகலை உட்பட்ட தோட்டப் பகுதிகளில் நேற்று (07) இரவுமுதல் திடீரென வீசிவரும் பலத்த காற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக உதவிகளை வழங்குமாறு மாவட்ட அதிபருக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.
வீடுகளுக்கு ஏற்பட்டுள்ள சேதம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை மாற்று இடங்களில் தங்கவைப்பதுடன் அவர்களுக்கான உலருணவுகளை வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு,சேதமடைந்த வீடுகளை சீர்திருத்துவதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் செந்தில் தொண்டமான் பணிப்புரை வழங்கியுள்ளார்.
அத்துடன் இப்பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு, பாடசாலையை சீர்திருத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஊவா மாகாண செயலாளருக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார்.
19 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
52 minute ago