2026 மே 07, வியாழக்கிழமை

பாதை புனரமைப்புக்கான பணிகள் ஆரம்பிப்பு

Editorial   / 2020 மார்ச் 18 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

 

தோட்ட உட்கட்டமைப்பு,  சமூக வலுவூட்டல்  அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் பணிப்புரைக்கமைய, நுவரெலியா பிரதேச சபையின 20 இலட்சம் ரூபாய் நிதிஒதுக்கீட்டில், கந்தப்பளை எஸ்கடல் தோட்டத்துக்கான கொங்கிரீட் பாதை புனரமைக்கப்படவுள்ளது.

பாதைப் புனரமைப்புக்கான பணிகள்,  நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜின் நேரடிப் பார்வையில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது தோட்ட மக்களுடன் கலந்துரையாடிய தவிசாளர், வீதி அமைப்பு வேலைகளை செவ்வனே செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதோடு, எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .