செ.தி.பெருமாள் / 2019 டிசெம்பர் 04 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் போத்தல்களை மீள்சுழற்சி செய்வதற்கும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதத்தைக் குறைப்பதற்கும் மத்திய மாகாணத்தில் புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வு, கண்டி மாவட்ட செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர் காரியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்தப் புதிய திட்டத்தில், பிளாஸ்டிக், பொலித்தீன்களைச் சேகரிப்பதற்காக, தனி தொட்டில் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில், மத்திய மாகாணத்தின் 13 இடங்களில் இந்த மீள் சுழற்சி இயந்திரங்களைப் பொறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில், இதை ஒவ்வொரு பாடசாலைகளிலும் பொறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .