2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

பீ.ஆர்.அம்பேத்கர் நினைவு தினம்

Editorial   / 2018 மே 01 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கண்டி, மலையக கலை கலாசார சங்கத்தின் ஏற்பாட்டில், இந்திய அரசியல் அமைப்பின் தந்தை என்றும், நலிவுற்ற மக்களின் உரிமைக்காக குரல்கொடுத்தவர் எனவும் போற்றப்படும், கலாநிதி பீ.ஆர்.அம்பேத்கர் நினைவு தினம் மற்றும் இரத்தினதீபம் அமைப்பின் 23ஆவது வருட விருது விழா, எதிர்வரும் 6ஆம் திகதி, கண்டி கெப்பட்டிப்பொல மண்டபத்தில் இடம்பெற உள்ளது.

இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக மத்திய மாகாண போக்குவரத்து, மின்சக்தி அமைச்சர் எதிரிவீர வீரவர்தனவும், விசேட அதிதிகளாக, திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குனருமான மத்மசிறி கொடிக்கார, மெதமகநுவர மொரகஹமுல முருகன் கோவில் அறங்காவலர் விஷ்வகீர்த்தி எஸ்.முத்தையா, வீரகேசரி தினசரியின் உதவி செய்தி ஆசிரியர் ஜோர்ஜ் ஸ்டீவன் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேற்படி வைபவத்தில், பல்வேறு துறை சார்ந்த பலருக்கும், இரத்தினதீபம் விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X