Editorial / 2019 ஜனவரி 18 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய அரசியலமைப்பு வெற்றிகரமாக நிறைவேறுவதற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியும் பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று, ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாக வேலுகுமார் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன், புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு உள்நாட்டிலேயே தீர்வு காண்பதற்கு கிடைத்துள்ள இறுதி வாய்ப்பை, குறுகிய அரசியல் நோக்கத்துக்காக இவர்கள் குழப்பியடிப்பார்களாயின், அது நாட்டுக்கு இழைக்கும் மாபெரும் துரோகமாகவே அமையும் என்றும் சுட்டிக்காட்டினார்.
கண்டி நகரில், இன்று (18) நடைபெற்ற அரசியல் நிகழ்வில் கலந்துகொண்டு, புதிய அரசியலமைப்பு குறித்து கருத்து வெளியிட்ட வேலுகுமார் எம்.பி, புதிய அரசமைப்பு வரைவுக்கான யோசனைகள் உள்ளடங்கிய நிபுணர் குழுவின் அறிக்கையானது, கடந்த வெள்ளிக்கிழமை அரசமைப்பு நிர்ணயச்சபையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் முன்வைக்கப்பட்டதென்றும் இது புதிய அரசியலமைப்புக்கான இறுதிபடுத்தப்பட்ட சட்டமூலம் கிடையாது என்றும் தெரிவித்த அவர்,
அதை தயாரிப்பதற்கான ஆரம்பக்கட்ட வரைவு நகல் மாத்திரமே சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
எனினும், நிபுணர் குழு அறிக்கையிலுள்ள உள்ளடக்கங்களை, ஆறாம் அறிவைக்கொண்டு பகுத்தறிந்து பார்க்காமலேயே அதற்கு பிரிவினைவாத முத்திரையை மஹிந்தவும் அவர்களின் சகாக்களும் குத்தியுள்ளதாகச் சாடினார்.
மக்களை நல்வழிப்படுத்தும் வகையில், ஆலோசனைகளை வழங்கவேண்டிய மகாநாயக்க தேரர்கள் கூட, புதிய அரசமைப்பை இனவாத நோக்கில் பார்ப்பது கவலையளிக்கின்றதென்றும் அதனால், நடுநிலை பார்வையை செலுத்தும் மகாநாயக்க தேரர்களின் பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது என்றும் விமர்சித்தார்.
“தமிழ் பேசும் மக்களுக்கு எதுவுமே கிடைக்ககூடாது என நினைக்கும் சிங்கள மேலாதிக்க தன்மை ஒழியும் வரை, நாட்டில் நிலையான சமாதானம் மலரப்போவதில்லை. அதுமட்டுமல்ல இலங்கையில் உள்ளக பொறிமுறையானது என்றுமே வெற்றியளிக்காது. ஆகவே, சர்வதேசத்தின் தலையீடு அவசியம் என்பதையே மஹிந்த அணியினதும் கடும்போக்குடைய சிங்கள தேசிய வாத அமைப்புகளின் செயற்பாடுகள் உணர்த்தி நிற்கின்றன என்று அவர் மேலும் கூறினார்.
39 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
43 minute ago
2 hours ago