2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

புளத்சிங்கள புறக்கணிப்பு

Editorial   / 2017 ஜூன் 04 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

 

களுத்துறை மாவட்டத்தில் புளத்சிங்கள பிரதேசத்தில், இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்று, அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

புளத்சிங்கள நகரை அண்மித்த பகுதிகளில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு, பெறுமதியான பொருட்களை இழந்துள்ள மக்களுக்கு, கிராம சேவகர் பதிவு இல்லை என்று கூறப்பட்டு அம்மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

நாட்டின் வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுற்றறிக்கைகளை புறம் தள்ளி விட்டு, அவர்களுக்கு நிவாரண உதவிகளை பெற்றுக் கொடுக்குமாறு அரசாங்கம் கூறியுள்ளபோதிலும், புளத்சிங்கள பகுதிகளில்  பாதிக்கப்பட்ட மக்களை சம்பந்தப்பட்ட பிரிவுக்கான கிராமசேவக அதிகாரிகள் இன்றுவரை கண்டு கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

எனவே, இவ்விடயத்தில் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .