2026 மே 07, வியாழக்கிழமை

பெருந்தோட்ட மக்கள் விழிப்புடன் செயற்படுங்கள்

Editorial   / 2020 மார்ச் 17 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ சண்முகநாதன்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், பெருந்தோட்ட மக்கள் அது தொடர்பில் அவதானத்துடனும் விழிப்புணர்வுடனும் இருப்பது அவசியம் என்று, தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.உதயகுமார் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.   

அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில், பொதுஇடங்களில் கூட்டம் கூடுதல், சுகாதார விழிப்புணர்வைப் பின்பற்றுதல் முதலான விடயங்களில், பெருந்தோட்டப் பகுதி கவனம் செலுத்துவது குறைவாகக் காணப்படுவதாக, சுகாதாரப் பணிப்பாளர் தெரிவித்துள்ளதை கவனத்திற் கொள்ள வேண்டும் என்றார்.  

 “கொரோனா” வைரஸ் என்பது, உயிர்கொல்லி தொற்று என்பது உலகளாவிய ரீதியில் உணரப்பட்டுள்ளது என்றும் வரும் முன்னர் எவ்வாறு காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதை, விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன என்றும் அதில் சிறியவர்கள், பெரியவர்கள் என்ற வயது வித்தியாசம் இன்றி அனைவரும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .