2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

பேருந்தின் மிதி பலகையில் பயணித்தவர் கீழே விழுந்து மரணம்

Janu   / 2025 பெப்ரவரி 18 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - இரத்தினபுரி வீதி, தானாயம சந்திக்கு அருகில் திங்கட்கிழமை (17) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளளார். யட்டியந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பயணிகளை ஏற்றுவதற்காக பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்திய தனியார் பேருந்தோன்று மீண்டும் கொழும்பு நோக்கிப் பயணம் ஆரம்பித்த போது பேருந்தின் மிதிபலகையில் நின்றுகொண்டிருந்த குறித்த நபர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X