Niroshini / 2021 ஏப்ரல் 27 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கணேசன்
பொகவந்தலாவை - கிவ் தோட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக, பொகவந்தலாவை சுகாதார வைத்திய அதிகாரி ஜெய் கணேஸ் தெரிவித்தார்.
நேற்று (26) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போதே, இவர்களுக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.
இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களில், 4 மாத சிசு ஒன்றும் 7 வயது சிறுவன் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த 8 தொற்றாளர்களும் சித்திரை புத்தாண்டு விடுமுறையில், கொழும்புக்குச் சென்று வந்தனரெனவும், அவர் கூறினார்.
இவர்கள் அனைவரும் ஏற்கெனவே தொற்றுக்குள்ளான குறித்த குடும்பத்தின் தலைவருடன் (தந்தையுடன்) நெருங்கிய தொடர்பை பேணியதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தொற்றுக்குள்ளான தந்தை, பொகவந்தலாவை - மோரா தோட்டத்தில் உள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் சிசிச்சை பெற்றுவருவதாகவும் ஜெய் கணேஸ் தெரிவித்தார்.
இதையடுத்து, தொற்றாளர்கள் வசிக்கும் வீடு, அவர்கள் சென்று வந்த இடங்கள. அனைத்தும் தோட்ட நிர்வாகத்தால் கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், அப்பகுதியில் இருந்த குழந்தை பராமரிப்பு மையமொன்றும் முன்பள்ளியொன்றும், வழிபாட்டு தலமொன்றும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பொகவந்தலாவை - கெர்கர்ஸ்வோல்ட் தோட்டத்திலும், ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago