Kogilavani / 2021 பெப்ரவரி 19 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
பொகவந்தலாவை பொதுசுகாதார பிரிவில், மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக, அப்பிரிவுக்குப் பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகர் வை.பி.எல்.டி.பஸ்நாயக்க தெரிவித்தார்.
இதற்கமைவாக பொகவந்தலாவை பொதுசுகாதார பிரிவில், தொற்றாளர்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்வடைந்துள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை (19) காலை வெளியான பிசிஆர் பரிசோதனை முடிவுகளுக்கு அமையவே 09 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவையிலுள்ள பாடசாலையொன்றில், தரம் 11இல் கல்வி பயின்று வரும் மாணவன் ஒருவருக்கு, கடந்தவாரம் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, அந்த மாணவனுடன் தொடரபைப் பேணிவந்த ஆசிரியர்கள் 10 பேர் உட்பட 105 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன் முடிவுகள், இன்று (19) வெளியானபோதே, 9 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைவாக மேற்படி பாடசாலையில், தரம் 11 ஏ,பி,சி பிரிவுகளைச் சேர்ந்த அனைத்து மாணவர்களும், பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
தொற்றுக்குள்ளான ஒன்பது பேரும், கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று, பொதுசுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.
19 minute ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
21 Jan 2026
21 Jan 2026