R.Maheshwary / 2022 பெப்ரவரி 16 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
மலையகத்தில் தொடரும் கோயில் உடைப்பு பொலிஸ் விசாரணைகள் மந்த கதியில் இடம்பெறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் வே. இராதாகிருஸ்ணன் குற்றம் சுமத்தியுள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக கோயில்கள் உடைக்கப்படுகின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், இது தொடர்பாக இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை.இதன் மூலம் தெரியவருவதாவது பொலிஸாரின் விசாரணைகள் மந்த கதியில் நடைபெறுகின்றது என்பதே என்றார்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக கோயில் உடைப்பு சம்பவங்கள் பதிவாகிவருகின்றன.நேற்று முன்தினம் அக்கரபத்தனை டயகம் பகுதிகளில் சுமார் 5 கோயில்கள் உடைக்கப்பட்டுள்ளன.
அந்த கோயில்களில் இருந்த உண்டியல்கள் களவாடப்பட்டுளளன.அதே போல நகைகளும் கலவாடப்பட்டுள்ளன.இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நுவரெலியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்ஹவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளேன்.அவரும் குறித்த பகுதிக்கு விசேட பொலிஸ் குழு ஒன்றை அனுப்பிவைப்பதாக தன்னிடம் தெரிவித்துள்ளார்.
வெறுமனே முறைப்பாடுகளை மாத்திரம் பதிவு செய்து வைப்பதன் மூலம் எதுவும் நடைபெறாது.அது மாத்திரமன்றி கோயில் நிர்வாகத்தையும் மாத்திரமே விசாரணை செய்கின்றார்கள்.எனவே சம்பவத்துடன் தொடர்புடையவர்களை இனம் காண்பதற்கு விசேட செயல்திட்டம் ஒன்றை பொலிஸார்ர் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
18 minute ago
27 minute ago
33 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
27 minute ago
33 minute ago
39 minute ago