Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஆ.ரமேஸ் / 2017 ஜூலை 29 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாவட்டம், ராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தப்பளை, பகலவத்தை தோட்டத்தில், பெண் ஒருவர் பொல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், குறித்த பெண்ணின் கணவர், நேற்று (29) ராகலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
இராமலிங்கம் மகேஸ்வரி (வயது 41) என்ற பெண்ணே, நேற்று (28) இரவு, இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மது போதையில் வீட்டுக்கு வந்த கணவருக்கும் மனைவிக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும் பின்னர் அது, கைகலப்பாக மாறியமையால், பொல்லொன்றை எடுத்த கணவர், மனைவியின் தலையில் தாக்கியுள்ளார் என்று, ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான பெண், அயலவர்களின் உதவியுடன், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லும் போது, வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .