2026 ஜனவரி 21, புதன்கிழமை

போதை திருடர்களால் மக்கள் திண்டாட்டம்

Kogilavani   / 2021 ஏப்ரல் 06 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

எஹலியகொட  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  பகுதிகளில், போதைப் பொருளுக்காக திருடுபவர்களால், தாம் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக, பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

வீடுகளிலுள்ள பெறுமதிவாய்ந்தப் பொருட்களை, போதைப் பொருள் திருடர்கள் திருடிக்கொண்டு விற்பனைச் செய்வதாக பாதிக்கப்பட்டவர்கள், எஹலியகொட பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மேற்படிப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், போதைப் பொருள் பாவனையாளர்களின் தொகை அதிகரித்து வருகின்ற நிலையில், போதைப் பொருட்களை வாங்குவதற்காக இவ்வாறானவர்கள் திருட்டில் ஈடுபட்டு வருவதாக, பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

வீடுகளில் மட்டுமன்றி வெளியே காணப்படும் பெறுமதியான உபகர ணங்கள், மின்குமிழ்கள், ஆடைகள், பூச்சாடிகள், வாகனங்களின் உ திரிப்பாகங்கள் என்பவற்றையும் இவர்கள் திருடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலைமையில் தமது வீடுகளையும் வீட்டு வளவுகளில் இருக்கும்  பொருட்களையும் பாதுகாப்பதற்கும் பாரிய பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே இது தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X