Editorial / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கணேசன்
ஹட்டன் மற்றும் கொட்டகலைப் பகுதிகளில், கேரள கஞ்சா மற்றும் ஹெரோயின் போதை பொருள் வைத்திருந்த ஏழு பேரை, நேற்று (23) மாலை கைதுசெய்துள்ளதாக, ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஹட்டன் குடாகம, கொட்டகலை, டிக்கோயா ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போதே, கேரள கஞ்சா 5200 மில்லிகிராமுடன் 02 பேரும், ஹெரோயின் போதை பொருள் 1220 மில்லி கிராமுடன் 05 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள், கொட்டகலை, ஹட்டன், டிக்கோயா, குடாகம உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்களை இன்று (24), ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யவுள்ளதாகவும் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
13 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
3 hours ago
3 hours ago