Sudharshini / 2015 செப்டெம்பர் 22 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

கு .புஸ்பராஜ், ஆ.ரமேஸ்
தலவாக்கலை நகரில் முச்சக்கர வண்டிகளை நிறுத்துவதனால் வெளிமாவட்டங்களிலிருந்து நகரத்துக்குள் வரும் பொதுமக்களுக்கும் வாகனங்களுக்கும் பாரிய இடையூறு ஏற்படுவது தொடர்பில் தமது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸ் நிலைய அதிகாரி ஆர்.எம்.வணிகசேகர தெரிவித்தார்.
தலவாக்கலை நகரசபையில் பதிவுசெய்யப்பட்ட 2,000க்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகள், இவ்வாறு தலவாக்கலை நகரில் நிறுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
தலவாக்கலை கதிரேசன் ஆலய மண்டபத்தில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் திங்கட்கிழமை (21) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே அவர் இதனை கூறினார்.
இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு சாரதிகள் நல்ல ஆலோசணைகளை வழங்கவேண்டுமெனவும் இதற்கு தீர்வை பெற்றுக்கொள்வதற்காக நகரசபை செயலாளர் உள்ளிட்ட முக்கிய தரப்பினர்களை அழைத்து இவ்வார இறுதியில் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .