2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

முச்சக்கரவண்டி - கெப் விபத்து; இருவர் காயம்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ,இராமசந்திரன்

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை கரோலினாப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (18) இரவு 8.30க்கு கெப் ரக வாகனனும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் இரண்டு பேர் பலத்த காயங்களுடன் வட்டவளைப் பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

முச்சக்கரவண்டியின் சாரதியும் மற்றுமொருவருமே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
 
கினிகத்தேனையிலிருந்து ஹட்டன் நோக்கப்  பயணித்த முச்சக்கரவண்டி, ஹட்டன் பகுதியிலிருந்து கினிகத்தேனை நோக்கிப் பயணித்த கெப் ரக வாகனத்துடன் இவ்வாறு மோதியுள்ளது. 

குறித்த முச்சக்கரவண்டி, கெப் ரக வாகனத்தில் மோதுண்டு பிரதான வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
கெப் ரக வாகனத்தின் சாரதி வாகனத்தை அதிக வேகமாக செலுத்தியதன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும் அவரைக் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .