Sudharshini / 2015 செப்டெம்பர் 01 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
சி.எம்.ரிஃபாத்
குருநாகல்-புத்தளம் வீதியில் திங்கட்கிழமை (31) இரவு இடம்பெற்ற விபத்தில் 2 மாத சிசு உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குருநாகல்- புத்தளம் வீதி, குருநாகல் நகரை அண்மித்த பகுதியில் இவ்விபத்து சம்பவித்துள்;ளது.
குருநாகல் நகரை நோக்கி பயணித்துக்குக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்று, திடீரென வீதியை விட்டு விலகி, மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில், முச்சக்கரவடிண்யில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்தில் உயிரிழந்த சிசுவின் சடலம் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை குருநாகல் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago