2026 ஏப்ரல் 24, வெள்ளிக்கிழமை

மாணிக்கக்கல் அகழ்ந்த எண்மர் கைது

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 29 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு. இராமசந்திரன், எஸ்.கணேசன்

இருவேறு பகுதிகளில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேரை, நேற்றுப் புதன்கிழமை (28) பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

ஹட்டன் போடைஸ் தோட்டத்திலும் அதே தோட்டத்தைச் சேர்ந்த நால்வரை, ஹட்டன் பொலிஸார், நேற்யை தினம் மாலை கைதுசெய்ததுடன், அவர்கள் வசமிருந்த உபகரணங்களையும்  கைப்பற்றியுள்ளனர்.

மேலும், பொகவந்தலா மானெலியக் காட்டுப் பகுதியில் நேற்று இரவு, மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ராணிக்காடுப் பகுதியைச் சேர்ந்த நால்வரை, பொகவந்தலாப் பொலிஸார் கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களை, ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்வுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .