2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

மாணிக்கக்கல் அகழ்ந்த 7 பேர் கைது

Kogilavani   / 2016 மார்ச் 02 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

பொகவந்தலாவை, மாவெலி காட்டில் சட்டவிரோதமாக  மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்  கைதான ஏழு பேரையும் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி 7 பேரையும் பொலிஸார் நேற்று(7) இரவு  கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து மாணிக்கக்கல் அகழ்வதற்காக பயன்படுத்திய உபகரணங்களை கைப்பற்றியுள்ளனர்.

பொகவந்தலாவை கெம்பியன் ஓல்டி பகுதியை சேர்ந்தவர்களே இதன்போது கைதுசெய்யப்பட்டனர். இவர்கள், இப்பகுதியில் பல நாட்களாக சட்டவிரோத மாணிக்கf;கல் அகழ்வில் ஈடுப்பட்டு வந்துள்ளதாக தெரியவருகிறது.

இவர்களுக்கு எதிராக ஹட்டன் நீதவான் முன்னிலையில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .