Sudharshini / 2015 ஒக்டோபர் 10 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா, மவுசாகலை தோட்ட சீட்டன் பிரிவில் பாடசாலை மாணவி (17 வயது) ஒருவரை தொடர்ந்து இரண்டு வருடங்களாக துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி வந்த குடும்பஸ்தரை மஸ்கெலியா பொலிஸார் நேற்று (09) கைதுசெய்துள்ளனர்.
சந்தேகநபர், கடந்த இரண்டு வருடங்களாக மதுபோதையில் வந்து சிறுமியை வற்புறுத்தி தொடர்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கியுள்ளார் என ஆரம்ப விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மேற்படி சந்தேக நபரின் மனைவி கடந்த இரண்டு வருடங்களாக வெளிநாட்டில் வேலை செய்துவந்துள்ளார். இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து வீட்டுக்கு வந்திருந்து மேற்படி சந்தேக நபரின் மனைவி, குறித்த மாணவியின் மீது சந்தேகம் ஏற்பட மாணவியை, மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியிடம் அழைத்துச் சென்று பரிசோதித்துள்ளார்.
குறித்த மாணவியை பரிசோதித்த வைத்திய அதிகாரி, மாணவி 4 மாத கர்ப்பிணி என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சிறுமியின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமையவே, மேற்படி சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மேலும், சிறுமி வைத்திய பரிசோதனைக்காக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்;ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
41 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago