2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

மாணவியின் சடலம் மீட்பு

Princiya Dixci   / 2017 மார்ச் 25 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியா "கிறேகறி "தெப்பக் குளத்திலிருந்து இன்றுக் காலை 9 மணியளவில், 16 வயதுடைய மாணவியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்ட மாணவி, நுவரெலியா நகரின் பெண்கள் பாடசாலை ஒன்றில் க.பொ. த சாதாரண தரத்தில் பயிலும் அ.சுலோச்சனா என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவி, தனது வீட்டிலிருந்து நேற்றிரவு காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சடலம், தற்பொழுது பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளதாக, நுவரெலியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X