2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மிதிபலகையிலிருந்து தவறி விழுந்த வயோதிபருக்கு காயம்

Sudharshini   / 2015 நவம்பர் 09 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். புஸ்பராஜ்

தனியார் பஸ்ஸில்  ஏறி மிதிபலகையில்  இருந்து தவறி விழுந்து 52 வயதுடைய நபர் பலத்த காயங்களுடன் மன்றாசி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்பட்டுள்ளனர்.

இச்சம்பவம், அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நியூபோட்மோர் தோட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தலவாக்கலை நகரத்திலிருந்து டயகம நோக்கி  இன்று திங்கட்கிழமை காலை 7 மணிக்கு சென்ற தனியார் பஸ்ஸில் ஏறியவரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

நியூபோட்மோர் தோட்டத்தினை சேர்ந்த சாத்தையா என்பவரே காயமடைந்துள்ளார்.

இவ்விபத்து தொடர்பான விசாரணையை அக்கரபத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .