Kogilavani / 2016 ஒக்டோபர் 03 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்
வட்டவளை ரொசெல்ல பகுதியிலுள்ள ஆசிரியர் ஒருவரது வீட்டில் கொள்ளையடித்தவர்களை, அண்மையில் ஹட்டன் பிரதேச பொலிஸ் பிரிவுக்கு கொண்டுவரப்பட்ட மோப்ப நாய்களின் உதவியுடன் கைது செய்துள்ளதாக, மோப்பநாய் பிரிவின் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
குறித்த ஆசிரியரின் வீட்டில், கடந்த சனிக்கிழமை (01) இரவு, 9 பவுண் தங்க நகைகள் மற்றும் 1 இலட்சம் ரூபாய் பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இது குறித்து வீட்டுரிமையாளர்கள், ஞாயிற்றுக்கிழமை (02) பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.
தானும் தனது மனைவியும் வெளியில் சென்றிருந்த வேளை, வீட்டிலுள்ள தங்க நகைள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக இவர்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
முறைபாட்டின் பிரகாரம் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், திருடர்களினால் விட்டுச் செல்லப்பட்டதாக கூறப்படும் அலைபேசியொன்றின் பின்புற மூடியைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதனுதவியுடன் மோப்பநாயைக் கொண்டு தேடுதல் நடத்திய பொலிஸார், அங்கிருந்து சுமார் 1 கிலோமீற்றர் தூரத்திலிருந்த சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து 70,000 ரூபாய் பணம், அலைபேசி என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். எனினும், திருடப்பட்ட நகைகள் இதுவரை மீட்கப்படவில்லை என பொலிஸார் கூறினர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ஹட்டன் பிரதேச பொலிஸ் பிரிவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட மோப்பநாய்களின், முதலாவது வேட்டை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago