2026 ஜனவரி 21, புதன்கிழமை

ம.ம.முவின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் நியமனம்

Kogilavani   / 2021 ஏப்ரல் 07 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

மலையக மக்கள் முன்னணியின் கேகாலை மாவட்ட அமைப்பாளரும் முன்னணியின் பிரதிநிதிச்செயலாளருமான ஜெகநாதனின் வேண்டுகோளுக்கு அமையவே, புளத்கொஹூப்பிட்டிய  அமைப்பாளராக  விஜயரட்ணம் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னணியின் மறுசீரமைப்பின் ஓர் அங்கமாக இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி நியமனத்தை நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் வழங்கியுள்ளார்.

இதன்போது கட்சியின் செயலாளர் நாயகமும் பேராசியருமான சங்கரன் விஜயசந்திரன், முன்னணியின் பிரதி பொருளாளர் ஜெகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X