2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

மக்கள்தெனியவில் அமைக்கப்படும் வீடுகளைச்சுற்றி மின்சார வேலி அமைக்க திட்டம்

Kogilavani   / 2016 மார்ச் 11 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா

மீரியபெத்த அனர்த்தத்தினால்; பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகளைச் சூழ, மின்சார வேலிகளை அமைப்பதற்கான ஏற்பாடுகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது. இதற்காக வன ஜீவராசிகள் அமைச்சு, ஆரம்பக் கட்டமாக 17 இலட்சத்து எழுபதாயிரத்து எண்ணூற்று பத்தொன்பது ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. ஒன்றரை மைல் தூரத்துக்கு, இவ்வேலி அமைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

இப்பிரதேசத்துக்குள் காட்டு யானைகள் பிரவேசிப்பதால், மக்களின் பாதுகாப்பு கருதி இம்மின்சார வேலி அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய நிலையில் 08 காட்டு யானைகள், மக்கள்தெனிய பிரதேசத்தில் இரவு வேளையில் பிரவேசிப்பதாக, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கொஸ்லாந்தை, மீரியபெத்தயில் கடந்த 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி, ஏற்பட்ட மண்சரிவுக் காரணமாக பாதிக்கப்பட்ட 75 குடும்பங்கள் தொடர்ந்தும், அம்பிட்டிகந்த தேயிலைத் தொழிற்சாலையில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கான வீடமைப்புத் திட்டமானது  மக்கள்தெனிய பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் 49 வீடுகளின் நிர்மாணப்பணிகள் மட்டுமே பூர்த்தியாகியுள்ளதாக தெரியவருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .