Sudharshini / 2015 செப்டெம்பர் 10 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெம்பள்ஸ்டோவ் பகுதியில் தனது 13 வயதான மகளை, துஷ்பிரயோகத்தக்கு உட்படுத்தியதாக கூறப்படும் அவரது தந்தையை எதிர்வரும் 22ஆம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் பிரசாத் லியனகே, புதன்கிழமை (09) உத்திரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
குறித்த சிறுமியின் பெற்றோருக்கு இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, தாய் அவ்விருவரையும் விட்டுச் சென்றுவிட்டார். அச்சிறுமி தனது தந்தையின் பாதுகாப்பில் இருந்துள்ளார்.
இந்நிலையில், சிறுமியின் தந்தைக்கும் மற்றொரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த நபர் தனது மகளையே பல தடவைகள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதுடன் தாக்கியும் உள்ளார் என கள்ளத்தொடர்பை கொண்டிருக்கின்ற அந்தப்பெண், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டுக்கு அமைய அந்நபரை கைதுசெய்து, நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே, மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
42 minute ago
46 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
46 minute ago
2 hours ago