Sudharshini / 2016 மார்ச் 01 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ
தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் இம்மாதம் 13ஆம் திகதி ஹட்டனில் நடைபெறவுள்ள மகளிர் தின விழா கொண்டாட்டம் தொடர்பான திட்டமிடல் கூட்டம், ஹட்டன் இந்திரா மண்டபத்தில் இன்று (01) நடைபெற்றது.
இந்த மகளிர் தினம் 'மலையக பெண்களே விழித்தெழுவோம் மகளிரை அரசியலில் வளர்த்தெடுப்போம்' என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெறவுள்ளதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
இதில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம், மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டம், மகளிர் அமைப்பின் தலைவியும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சரஸ்வதி சிவகுரு தலைமையில் நடைபெற்றது.

7 minute ago
42 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
42 minute ago
53 minute ago
1 hours ago